நீட் முறைகேட்டில் கைதானவருடன் பாஜவுக்கு தொடர்பு? விசாரணை நடத்த தேஜஸ்வி கோரிக்கை

பாட்னா: நீட் தேர்வு முறைகேடு குறித்து பீகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்கா கூறுகையில்,‘‘ நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிக்கந்தர் பிரசாத் யத்வேந்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் தேஜஸ்வி யாதவுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ்குமாரிடம் பாஜ வலியுறுத்தும்’’ என்றார். இதற்கு பதிலளித்துள்ள தேஜஸ்வி, ‘‘சின்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மாநில அரசு உத்தரவிடுவதில் எந்த தடையும் இல்லை. அதே நேரத்தில் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள வேறு 2 நபருக்கு பாஜவுடன் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றியும் விசாரிக்க வேண்டும். முக்கிய பிரச்னையை திசை திருப்பவே சின்கா இவ்வாறு பேசுகிறார்’’ என்றார்.

* பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி: நீட் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போர்வையில் அரசியல் செய்வது சரி இல்லை என தெரிவித்துள்ளார்.

* தேசிய பிரச்னை: பிரியங்கா
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், கடந்த 5 ஆண்டுகளில் 43 தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிந்துள்ளன.பாஜ ஆட்சியில் வினாத்தாள் கசிவு தேசிய பிரச்னையாகி விட்டது. இதனால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி விட்டது என குறிப்பிட்டுள்ளார்.

The post நீட் முறைகேட்டில் கைதானவருடன் பாஜவுக்கு தொடர்பு? விசாரணை நடத்த தேஜஸ்வி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: