தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் பழங்களுடன் கூடிய மண் பானைகள்: எம்எல்ஏக்கள் வழங்கினர்

திருவள்ளூர்: பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் ஏற்பாட்டில் வெள்ளவேடு ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேசிங்கு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஷ்வரி கந்தன், ஒன்றிய நிர்வாகிகள் கந்தபாபு, சாக்ரடிஸ், சுகுமார், கட்டதொட்டி குணசேகரன், கந்தன், பிரவின்குமார், பிரதீப், உதயகுமார், மணிவண்ணன், பரணிதரன், கார்த்திகேயன், சர்மன்ராஜ், சிபிசக்ரவர்த்தி, தியாகு, பிரசாந்த், பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மோர், இளநீர், வெள்ளரிக்காய், குளிர் பானங்கள் மற்றும் மண் பானைகளை வழங்கினர். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கமலேஷ், நகரச் செயலாளர் திருமலை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருணாநிதி, வார்டு உறுப்பினர் ராஜேஷ், வேலு, அண்ணாமலை, அம்பேத் குமார், பிரபு, ராஜேஷ், சுரேந்தர், அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் பழங்களுடன் கூடிய மண் பானைகள்: எம்எல்ஏக்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: