உலக குருதி கொடையாளர் தினம் அனுசரிப்பு: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூர், ஜூன் 15: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு 20 வது இரத்த கொடையாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலரும், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலருமான டாக்டர் பிரியாராஜ் அனைவரையும் வரவேற்றார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, இணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மீரா, பூந்தமல்லி சுகாதார மாவட்டம் அலுவலர் பிரபாகரன், காசநோய் துணை இயக்குனர் சங்கீதா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு அலுவலர் கௌரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக குருதி கொடையாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 20வது ரத்த கொடையாளர்கள் தினம் ஆகும். இந்த குருதி கொடைக்கு தன்னார்வ கொடையாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

குருதி பரிமாற்றம் என்பது அறிவியலின் முக்கிய கண்டுபிடிப்பாகும். அத்தகையை கண்டுபிடிப்பின் மூலம் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆகையால் இத்தினத்தை அறிவியலை வாழ்த்த கூடிய ஒரு தினமாகவும் கருதலாம். பெரும்பாலும் ரத்த போக்கினால் பாதிக்கக் கூடியவர்கள் பெண்கள் தான். அவர்களுக்கு ரத்த தானத்தால் கிடைக்கக்கூடிய ரத்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தன்னார்வ இரத்த கொடையாளர்கள் எந்தவித பிரதிபலன் எதிர்பார்க்காமல் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை இந்த நேரத்தில் கௌரவப்படுத்துவதில் நாம் பெருமை கொள்ளலாம். ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் இரத்ததானம் வழங்குவது மட்டுமல்லாமல் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர்களையும் இந்த சேவையில் ஈடுபடுத்துவதற்கு முயற்சி கொண்டு பல உயிர்களை காப்பாற்றுவதற்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரத்ததான தின உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் இரத்ததானம் கொடையாளர்களை கௌரவிக்கும் வகையில் கேடயம் பாராட்டு சான்றிதழ் மற்றும் கொடையாளர் அட்டையினை வழங்கினார். இதில் இரத்ததான கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். குருதி பரிமாற்றம் என்பது அறிவியலின் முக்கிய கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆகையால் இத்தினத்தை அறிவியலை வாழ்த்த கூடிய ஒரு தினமாகவும் கருதலாம்.

The post உலக குருதி கொடையாளர் தினம் அனுசரிப்பு: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: