மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கட்டண விலக்கு

திருவள்ளூர், ஜூன் 15: மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் பிரிவு 32(1)ன் படி மாற்றுத்திறனாளி மாணவர்களின் உரிமைகளை மறுக்கப்படுவதால், அவர்கள் கல்வி பயில்வதில் உள்ள தடைகளை களைந்து 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி உரிமை சம அளவில் கிடைக்க பெறச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயனடையும் வகையில் குறிப்பிட்டுள்ள கல்லூரிகளில் கட்டண விலக்கு பெற்று பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 044 – 27662985, செல் எண்: 9499933496 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கட்டண விலக்கு appeared first on Dinakaran.

Related Stories: