சோம்பட்டு ஊராட்சியில் லட்சுமி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டி, ஜூன் 11: கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள சோம்பட்டு ஊராட்சியில் லட்சுமி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு ஊராட்சி, எடப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி அம்மன் ஆலயத்தில் தீமிதி நேற்று நடந்தது. இதற்கு முன்னதாக கடந்த மே 22ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. 28ம் தேதி காலை 9 மணியிலிருந்து 5 மணிக்குள் அம்மனின் சன்னிதானத்தில் விக்னேஸ்வர பூஜை, லட்சுமி கணபதி ஹோமம், நவகிரக ஓமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்புமிக்க பூஜைகள் நடத்தப்பட்டு 29ம் தேதி காலை 9 மணி அளவில் மஹா கும்பாபிஷேக விழாவானது இரண்டாம் கால யாகசால பூஜை நடத்தப்பட்டு விசேஷ திவ்ய ஹோமங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதில் தியாகராஜ பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் அதே ஸ்ரீ லட்சுமி அம்மனுக்கு நேற்று முன்தினம் 95 பேர் மூன்று நாள் விரதம் இருந்து காப்பு கட்டி தீயில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தினர். பின்பு இரவு வாண வேடிக்கையுடன் அம்மன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது இந்த நிகழ்ச்சியினை ஊர் பொதுமக்கள் சிறப்பாக முன்னின்று நடத்தினர். இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post சோம்பட்டு ஊராட்சியில் லட்சுமி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: