பாபநாசம் அருகே ஊர் பொதுக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

 

கும்பகோணம், மே4: பாபநாசம் அருகே புளியம்பாடி மேல தெருவில் ஊர் பொதுக்குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த சுரேந்தரன் என்பவர் கடந்தாண்டு ஏலத்தில் எடுத்து மீன்கள் வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென குளத்தில் உள்ள ஏராளமான மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுரேந்திரன் கபிஸ்தலம் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குளத்தில் உள்ள நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் இது சமூக விரோதிகளின் செயலா அல்லது வெயிலின் தாக்கமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பாபநாசம் அருகே ஊர் பொதுக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள் appeared first on Dinakaran.

Related Stories: