சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 13 பேர் கைது

சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.19 லட்சம் மதிப்புள்ள 33 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது.

அப்போது, கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம் ஆகிய பகுதியில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததாக திருவல்லிக்கேணியை சேர்ந்த மதன் (20), அம்பத்தூர் ஜோசப் (27), கொளத்தூர் ஜலாருதீன் (40), கோவை கோகுலகிருஷ்ணன் (27), கொருக்குபேட்டை காாத்திக்கேயன் (50), ராயப்பேட்டை ரகமதுல்லா (40), போரூர் விக்னேஷ் (28), மணப்பாக்கம் கண்ணன் (30), ராயப்பேட்டை பையாசுதீன் (33), திருவள்ளூர் பரத் (24), தர்மபுரி அர்ஜூன் (27), தி.நகர் சிவயோகேஸ்வரன் (18) ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,19,306 மதிப்புள்ள 33 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 13 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: