சீட் இல்லாததால் அமைச்சர் பதவி ராஜினாமா பஸ்வானின் தம்பி மீண்டும் பா.ஜ கூட்டணிக்கு ஆதரவு

பாட்னா: தேஜ கூட்டணியில் சீட் ஒதுக்காததை கண்டித்து ஒன்றிய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ராம் விலாஸ் பஸ்வானின் தம்பி பசுபதி குமார் பராஸ் தேஜ கூட்டணிக்கு தனது ஆதரவு தொடரும் என அறிவித்துள்ளார். மறைந்த ஒன்றிய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் தம்பியான பசுபதி குமார் பராஸ் பீகார் மாநிலம் ஹாஜிப்பூர் தொகுதியாக உள்ளார். ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான பசுபதி குமார் தலைமையிலான கட்சிக்கு எந்தவித சீட்டையும் பா.ஜ ஒதுக்கவில்லை. மேலும் அவர் எம்பியாக உள்ள ஹாஜிப்பூர் தொகுதியை பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் கட்சிக்கு ஒதுக்கிவிட்டது. மேலும் சிராக் பஸ்வான் கட்சிக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த பசுபதி குமார் ஒன்றிய அமைச்சரவையில் இருந்து விலகினார். அவர் எதிர்க்கட்சி இந்தியா கூட்டணியின் சார்பில் ஹாஜிப்பூர் தொகுதியில் களமிறக்கப்படலாம் என கூறப்பட்டது. இதற்காக ஆர்ஜேடி கட்சியும் ஹாஜிப்பூர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதப்படுத்தியது. தற்போது ஆர்ஜேடியும் அந்த தொகுதியில் வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்நிலையில், பா.ஜ கூட்டணிக்கு தனது கட்சி ஆதரவு அளிக்கும் என பசுபதி குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிடுகையில், ‘மோடியின் முடிவே எங்களுக்கு இறுதியானது. தேஜ கூட்டணி 400 இடங்களிலும்,பீகாரில் 40 இடங்களிலும் வெற்றி பெற நாங்கள் ஆதரவு அளிப்போம்’ என கூறியுள்ளார்.

The post சீட் இல்லாததால் அமைச்சர் பதவி ராஜினாமா பஸ்வானின் தம்பி மீண்டும் பா.ஜ கூட்டணிக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: