புதுடெல்லி: கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்(66). இவர் கடந்த 4 வாரங்களுக்கு முன் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார். இருந்தபோதும் தன் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்த அவருக்கு கடந்த 15ம் தேதி தலைவலி தீவிரமடைந்தது. மருத்துவர்களின் அறிவுரைப்படி அவரது மூளையை எம்.ஐ.ஆர். ஸ்கேன் எடுத்து பார்த்ததில், ஜக்கியின் மூளையில் ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டதால், கடந்த 17ம் தேதி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜக்கி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ரத்தகசிவை நிறுத்த ஜக்கி வாசுதேவின் மண்டை ஓட்டை அறுத்து மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்த ஜக்கி வாசுதேவ் 11 நாட்களுக்கு பிறகு பூரண நலம் பெற்று நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
The post மூளையில் அறுவை சிகிச்சை மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.