மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம்

 

கோவை, பிப். 14: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர்கள் செல்வசுரபி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

கிழக்கு மண்டலத்தில் 11 மனு, மேற்கு மண்டலத்தில் 4 மனு, வடக்கு மண்டலத்தில் 11 மனு, தெற்கு மண்டலத்தில் 4 மனு, மத்திய மண்டலத்தில் 15 மனு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 9 மனு என மொத்தம் 54 மனுக்களை மேயர் பெற்றுக்கொண்டார். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இம்முகாமில், உதவி கமிஷனர்கள் மாணிக்கம் (கணக்கு), கவிதா (கிழக்கு), சந்தியா (மேற்கு), ஸ்ரீதேவி (வடக்கு), பிரேம் ஆனந்த் (தெற்கு), செந்தில்குமரன் (சென்ட்ரல்), நகரமைப்பு அலுவலர் குமார் மற்றும் மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.