மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு வீரர்கள், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

 

தஞ்சாவூர்,பிப்.6: தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டையில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காளைகள், வீரர்கள், பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சாவூர் ஒன்றியம் மாதாக்கோட்டை ஊராட்சியில் இன்று மாவட்ட நிர்வாகம், கிராம விழாக்குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் விழாவிற்கான மேடை மற்றும் காளைகள் வருவதற்கான வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், இருபுறமும் தடுப்பு கம்பிகள், மருத்துவ குழுவினர். தீயணைப்பு துறை, வாகனம் நிறுத்துவதற்கான இடங்கள், காளைகள் வெளியேறும் பகுதி இடங்களில் காளைகளுக்கும், வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தேவையான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, ஒன்றியகுழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, ஊராட்சி தலைவர் சபரிராஜன், துணைத்தலைவர் சகாயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு வீரர்கள், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: