பள்ளிகளில் ஆய்வக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: பள்ளிகளில் ஆய்வக செயல்பாடுகள் சரியாக செயல்படுகிறதா என்பதை பள்ளிக்கல்வி இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதம்: பள்ளி ஆய்வகம் மற்றும் அதன் உபகரணங்களை முறையாக பராமரித்து வருவதில் ஆய்வக உதவியாளர்கள் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது.

எனவே, ஆய்வக உதவியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும், பாடத்திட்ட அடிப்படையில் ஆய்வக செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனுடன் ஆய்வக பராமரிப்பு பணிகளில் முழுக்கவனம் செலுத்திடும் வகையில், ஆய்வக உதவியாளர்களுக்கு அவர்களுக்கான பணியை மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

 

The post பள்ளிகளில் ஆய்வக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: