தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 2 பேர் பலி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே இரண்டு சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வடமாநிலத்தில் இருக்கும் பெண்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் ரமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி கோவிலுக்கு சுற்றுலா வேன்களில் வந்தனர்.

கோவிலுக்கு வந்த பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு அதன்பிறகு அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி செல்லவும் திட்டமிட்டிருந்துள்ளனர். இரண்டு வேன்களில் அவர்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக தனுஷ்கோடி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் அருகே இரண்டு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒரு வேன் சாலையில் கவிழ்ந்தது. மற்றோரு வேணும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் வேனிற்குள் இருக்கும் மக்களை மீட்டனர்.

மீட்பு துறையினருக்கும் தகவலை தெரிவிக்க அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேருக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும். இந்த விபத்து தொடர்பாக ராமேஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

The post தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: