₹5 ஆயிரம் கட்டணம் செலுத்த பணமில்லாததால் உ.பி.யில் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை சேர்க்க மறுப்பு: வாசலிலேயே பிறந்த குழந்தை உயிரிழந்த பரிதாபம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு பதவியில் உள்ளது. இங்குள்ள புடான் மாவட்டம் கபுல்புரா பகுதியில் வசிக்கும் ரவியின் மனைவி நீலம். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் அங்குள்ள மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அங்கு முதலில் மருத்துவர்கள் இல்லை என்று கூறி அனுமதிக்க ஊழியர்கள் மறுத்துள்ளனர். பின்னர் நீலத்தை பரிசோதனை கட்டணமாக மருத்துவமனை ஊழியர்கள் ₹5,000 கேட்டுள்ளனர். பணமில்லை என்று கூறியதால் ரவியையும், கர்ப்பிணி பெண் நீலத்தையும் ஊழியர்கள் மோசமாக நடத்தி வெளியே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வௌியே வந்த நீலத்துக்கு மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சிகிச்சையின்மை, குளிர் காரணமாக சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்து விட்டது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் குமார், “இது மிகவும் தீவிரமாக பிரச்னை. எந்த சூழலிலும் இதுபோன்ற தவறை மன்னிக்க முடியாது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

The post ₹5 ஆயிரம் கட்டணம் செலுத்த பணமில்லாததால் உ.பி.யில் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை சேர்க்க மறுப்பு: வாசலிலேயே பிறந்த குழந்தை உயிரிழந்த பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: