ஆடுகள் வரத்து அதிகரிப்பு

சேந்தமங்கலம், டிச.19: பவித்திரம், செவ்வந்திப்பட்டி சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் ₹20 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரம், செவ்வந்திப்பட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோவை, கொல்லிமலை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும் சுற்றுவட்டார பகுதியான நவலடிப்பட்டி, வரகூர், வடவத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடுகள் இறைச்சிக்காக வாங்கி செல்லப்படுகிறது. தற்போது சபரிமலை சீசனால் இறைச்சி நுகர்வு குறைந்துள்ளது. நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க வந்திருந்தனர். சந்தையில் ஆடுகள் ₹19 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. இதேபோல கோழிகள் ₹1 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ஆடுகள் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: