சென்னை: சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீராகி வருகிறது என மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 12 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மாநகரம் முழுவதும் 18,000 போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.