மதுரை: புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமான ஒப்பந்தத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆன்லைன் விண்ணப்பத்தில் கையெழுத்தில்லை எனக் கூறி எனது டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், தனியார் பணிகளை மட்டுமே செய்து வந்த தகுதியில்லாத நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்யவேண்டும் என்று மனுதாரர் புகார் அளித்தார். நகராட்சித் துறை நிர்வாக இயக்குநர், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர், ஒப்பந்த நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
The post புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமான ஒப்பந்தத்துக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.