மது அருந்தியதாக வீடியோ வெளியான விவகாரம்: சிறை தலைமை காவலர் பணியிடை நீக்கம்: சிறைத்துறை கண்காணிப்பாளர் உத்தரவு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை அரசினர் தோட்டத்தில் கிளை சிறை உள்ளது. இங்கு சிறைக் காவலர்களுக்கென தனியாக தங்கும் ஓய்வறை உள்ளது. பணி முடித்த பின்னர் சிறைக்காவலர்கள் அந்த அறையில் தங்குவது வழக்கம். இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வரும் சிறைக்காவலர் ஒருவர், அடிக்கடி அந்த அறையில் மது குடிப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் மது வாங்கி சென்று குடித்துள்ளார்.

வழக்கமாக சிறை கைதிகளுக்கு வெளி உணவு மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. ஆனால் சிறைக்காவலர் ஒருவர், மது வாங்கி வந்து சிறையில் உள்ள தனது தங்கும் அறையில் குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலர் மது அருந்தியதாக வீடியோ வெளியான நிலையில் சிறை தலைமை காவலர் ஜெயக்குமார் பணியிடைநீக்கம் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் உத்தரவு அளித்துள்ளார்.

The post மது அருந்தியதாக வீடியோ வெளியான விவகாரம்: சிறை தலைமை காவலர் பணியிடை நீக்கம்: சிறைத்துறை கண்காணிப்பாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: