நெல் பயிர் வளர்ச்சிக்கும், பச்சையம் உற்பத்தி மற்றும் ஒளிச்சேர்க்கை உள்ளிட்ட பல உயிர் வேதியியல் செயல்முறைகளுக்கு துத்தநாகம் நுண்ணூட்டச் சத்து அத்தியாவசியமானது. எனவே துத்தநாகச்சத்து குறைபாட்டினால் பயிர் வளர்ச்சி குன்றி மேல் இலைகளில் தூசி படிந்த பழுப்பு நிற புள்ளிகள் உண்டாகி துருப்பிடித்தது போல் காணப்படும். இதனால் அதிகளவு பதர் உண்டாக்குதல், தாமதமாக முதிர்ச்சி மற்றும் குறைந்த மகசூலுக்கு வழிவகுக்கிறது.
எனவே அதனை தவிர்க்கும் விதமாக விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் நெல்பயிரிடப்பட்டுள்ள இடங்களில்ஒரு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் அல்லது 5 கிலோ நெல் நுண்ணூட்டம் உரத்தை மணலுடன் கலந்து இட வேண்டும். இதன் மூலம் இச்சத்துக் குறைபாட்டில் இருந்து பயிரைப் பாதுகாத்து அதிக மகசூல் பெற முடியும் என வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி விவசாயிகளுக்கு ஆலோசனை கூறினார்.
தேசிய வளர்ச்சி திட்டத்தில் 50 சதவீதம் மானிய விலையில் துத்தநாக சல்பேட் உரம் வழங்கப்படுகிறது. அல்லது ஒரு ஏக்கருக்கு நெல் நுண்ணூட்டம் 5 கிலோ உரத்தை மணலுடன் கலந்து வயலில் இடவேண்டும். உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் நெல் நுண்ணூட்டத்தை பாஸ்கரமணியன் வேளாண்மை துணை இயக்குநர் விவசாயிகளுக்கு வழங்கினார்.
The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சத்து குறைபாட்டால் நெற்பயிர்களில் நோய் appeared first on Dinakaran.
