பிசிசிஐ தலைவர்களாக இருப்பவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள தங்களுக்கு பிடித்த 5 நட்சத்திர ஓட்டல்களை முன்னிறுத்துவது வழக்கம் பிசிசிஐ வருடாந்திர கூட்டம் அணி தேர்வு அறிவிக்கும் கூட்டம் செய்தியாளர்கள் சந்திப்பு என எல்லாமே அந்த ஓட்டலில் தான் நடக்கும். அந்த வரிசையில் இந்தியா சிமெண்ட் ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்த இந்திய அணி தொடர்பான அணைத்து கூட்டங்களும் அடையாறு கேட் ஓட்டலில் தான் நடைபெற்றன. அதில் பல சுவாரஸ்யங்களும் அரங்கேறி இருக்கின்றன. சச்சின் டெண்டுல்கரின் 35வது பிறந்தநாளன்று சென்னையை வீழ்த்திய மும்பை அணி மறுநாள் கிரவுன் பிளாசாவில் கேக் வெட்டி கொண்டாடியது. கேக்கை வெட்டிவிட்டு சச்சின் பேட்டி இருக்கட்டும் கேக்கை மிஸ் செய்து விடாதீர்கள் என்று சொன்னதும் அங்கிருந்த அத்தனை நிருபர்களும் தங்களை மறந்து சிரித்தனர். இந்திய கிரிக்கெட்டில் திரை மறைவில் நடந்த பல பஞ்சாயத்துகளுக்கு கிரவுன் பிளாசா மௌன சாட்சியாக இருந்திருக்கிறது.
2011ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனியை நீக்க தேர்வுக்குழு பரிந்துரைத்ததாக செய்தி வெளியானது. எனவே முத்தரப்பு தொடரில் தோனி கேப்டனாக நீடிப்பாரா என்ற சந்தேகத்தோடு அந்த ஓட்டலில் செய்தியாளர் சந்திப்புக்காக குவிந்த நிருபர்கள் அணி வீரர்கள் பட்டியலில் தோனி தொடர்வதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். அதே போல 2011 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி குறித்த அறிவிப்பு வெளியாகிறது என்றதும் ஒட்டுமொத்த நிருபர்களும் கிரவுன் பிளாசாவில் குவிந்தும் சிலரை வெளியே காத்திருக்க சொல்லும் நிகழ்வும் அரங்கேறியது. இதற்காக ஊடல் நிர்வாகம் வருத்தமும் தெரிவித்தது. 2013 ஐபில் தொடரின் பொது எழுந்த ஸ்பார்க் விங்ஸ்ன் குற்றசாட்டை தொடர்ந்து ஸ்ரீனிவாசன் பதவிவிலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் பிசிசிஐ அவசர கூட்டம் பார்க் ஷரடனில் தான் நடந்தது. இந்திய அணி சிஎஸ்கே மட்டுமல்லாது தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர்பான கூட்டங்களும் பார்க் ஷரடனில் தான் நடந்தது. கிரிக்கெட் மட்டுமல்லாது ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளும் இந்த ஓட்டலில் தங்கியிருந்துள்ளனர். கொரோனாவுக்கு பின் சிஎஸ்கே அணி லீலா பேலஸ் ஓட்டலுக்கு மாறிவிட்டது. டிசம்பர் மாதத்துடன் கிரவுன் பிளாசா ஓட்டலும் மூடுவிழா காணவுள்ளது.
The post கிரிக்கெட் வீரர்களின் நினைவில் நீங்கா இடம்பிடித்த கிரவுன் பிளாசா: பல முடிவுகளை கொண்டாடிய அடையார் கேட் ஓட்டல் appeared first on Dinakaran.
