திருவாலங்காடு ஒன்றியத்தில் ₹33 லட்சத்தில் வளர்ச்சி பணி: ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட குப்பம் கண்டிகை கிராமத்தில் செங்கழுநீர் அம்மன் கோயில் அருகில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் நேரில் சென்று நெற்களம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

அதே கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் தெருவில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டிலும் பொது நிதி ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை பணிகள் அமைக்கும் பணிகளை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு செய்தார். பழையனூர் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய பொறியாளர் பாலகிருஷ்ணன், மேலாளர் அண்ணாமலை, கஜேந்திரன், ராமமூர்த்தி, சொக்கலிங்கம், பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாலங்காடு ஒன்றியத்தில் ₹33 லட்சத்தில் வளர்ச்சி பணி: ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: