பாளை சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

*டிச.2ம் தேதி சப்பர பவனி

நெல்லை : பாளை சவேரியார் பேராலய பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் வருகிற டிச.2ம் தேதி புனிதரின் சப்பர பவனி நடக்கிறது.பாளையில் உள்ள தூய சவேரியார் பேராலயம் மிகவும் பழமை வாய்ந்தவையாகும். 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு சவேரியார் பேராலயம் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான பெருவிழா நேற்று மாலை 6 மணிக்கு ெகாடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி வரை நடக்கிறது.

பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் திருவிழா திருப்பலியையும் கொடியேற்றத்தையும் துவக்கி வைத்தார். சங்கரன்கோவில் வட்டார அதிபர் ஜோசப் கென்னடி மறையுரையாற்றினார். பங்குதந்தை சந்தியாகு, உதவி பங்கு தந்தையர்கள் மிக்கேல் மகேஷ், ஜோ பிரான்சிஸ், முதன்மை குரு குழந்தைராஜ், அந்தோணிராஜ் அடிகள், அருள்லூர்து எட்வின், ஆயர் செயலாளர் மிக்கேல்ராஜ் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருவிழாவில் நவ நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகளும், மறையுரைகளும் நடக்கிறது.இதனையடுத்து 26ம் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருள் சாதனமும், வரும் டிச.2ம் தேதி மாலை 6 மணிக்கு சவேரியாரின் சப்பரப் பவனியும் நடக்கிறது.

டிச.3ம் தேதி காலை 7.30 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில சிறப்பு திருப்பலியும், உறுதிப்பூசுதலும், அருள் சாதனமும் வழங்கப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமட அதிபர் அருள்ராஜ் தலைமையில் திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை சந்தியாகு, உதவி பங்கு தந்தையர்கள் மிக்கேல்மகேஷ், ஜோ பிரான்சிஸ் மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

The post பாளை சவேரியார் பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: