நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜீரோ கார்பன் பசுமை கருத்தரங்கம்

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய பசுமை கட்டிடக் கவுன்சில் (ஐஜிபிசி), தமிழ்நாடு அரசு ஆகியவை இணைந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜீரோ கார்பன் பசுமை குறித்த 3 நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று தொடங்கியது. கருத்தரங்திற்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தலைவர் குர்மித் சிங் அரோரா தலைமை வகித்தார். கருத்தரங்கை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்து, கருத்தரங்கு மலரை வெளியிட்டார்.

இதில், பூஜ்ஜியம் கார்பன் மதிப்பீட்டு குறித்த வழிகாட்டுதல் முறைகளை இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தேசிய தலைவர் குர்மித் சிங் அரோரா, பசுமை கட்டிட கவுன்சிலின் சென்னை பிரிவு தலைவர் அஜித் சோர்டியா, துணைத்தலைவர் ஆலிவர்பால் ஹட்செட் ஆகியோர் வெளியிட்டனர். அதேபோல் தற்போதுள்ள கட்டிடங்கள், வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கான பசுமை திட்டமும், 8 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு பசுமை உங்கள் பள்ளி என்ற திட்டமும் தொடங்கப்பட்டது. கண்காட்சியில் பசுமை கட்டிட அமைப்பிற்கான உபகரணங்கள் இடம்பெற்றிருந்தன.

 

The post நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜீரோ கார்பன் பசுமை கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: