ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை ரத்து..!!

உதகை: ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால் மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் 37 செ.மீ. அதி கனமழை கொட்டித் தீர்த்தது.

மேட்டுப்பாளையத்தில் பதிவான 37 செ.மீ. மழை, பருவமழை தொடங்கியதில் இருந்து ஒரு நாளில் பதிவான அதிகபட்ச மழை அளவு ஆகும். மேட்டுப்பாளையத்தில் 373 மி.மீ. மழை பெய்ததாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.  பெரியநாயக்கன்பாளையத்தில் 9.4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

பில்லூர் அணை – 7.8 செ.மீ., வேளாண் பல்கலை 6.1செ.மீ, தொண்டாமுத்தூர் – 4.6 செ.மீ. மழை பதிவாகியது. நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 24 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் கடந்த 24 மணிநேரத்தில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில்,  ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால் மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை ரத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: