நெல்லையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட்!!

நெல்லை : நெல்லையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘திருநெல்வேலி மத்திய மாவட்டம்,திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வதுவார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டைச் சேர்ந்த மாநகர பிரதிநிதி ஆர். மணி (எ) சுண்ணாம்பு மணி ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்குஅவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நெல்லை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளுங்கட்சி திமுக கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால் முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் யாரும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறவில்லை. ஒருசில அதிகாரிகள் மட்டுமே மனுக்களை பெற்றனர். இதனால் திமுக கவுன்சிலர்கள் மனுக்களுடன் மாநகராட்சி பிரதான அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர், சாலை பிரச்சினை உட்பட மக்களின் பிரச்சினைகளு க்கு மேயர் குரல் கொடுப்பதில்லை என்றும் கவுன்சிலர்களை மதிக்காமல் மேயர் நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

The post நெல்லையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.

Related Stories: