தொடர்ந்து பெய்த மழையால் அரும்பாக்கத்தில் மரம் விழுந்தது

அண்ணாநகர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு சாலைகளில் தேங்கியுள்ள நீரை அகற்றி போக்குவரத்து இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி காலனியில் சுமார் 10 ஆண்டுகள் ஆன மரம் வேரோடு சாய்ந்துவிழுந்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் பிரபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

The post தொடர்ந்து பெய்த மழையால் அரும்பாக்கத்தில் மரம் விழுந்தது appeared first on Dinakaran.

Related Stories: