தஞ்சாவூரில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

 

தஞ்சாவூர்,நவ.11: தஞ்சாவூரில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்தியா மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை 8வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவப்பிரிவால் நடத்தப்படும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் வடக்கு வீதியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் அனைத்து மூட்டு வலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் சளி, இருமல், ஆஸ்துமா, ஜூரம் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளிட்ட அனைத்து தோல் நோய்கள், இதயம் மட்டும் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் பலஹீனம், இரத்தச் சோகை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட அனைத்து நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கருப்பைக்கோளாறு மற்றும் பெண்களுக்கான நோய்கள், அயிற்றுப்புண், பசியின்மை, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானக் கோளாறுகள், சர்க்கரை, உப்பு நீர், ரத்தக் கொதிப்பு, மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருந்துகள் பரிசோதனை செய்து இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த முகாமில் சித்த அலுவலர் குணசேகரன், தஞ்சை மருத்துவ கல்லூரி ஆயுர்வேத மருத்துவர் கஜேந்திரன், மூத்த ஆயுர்வேத மருத்துவர் நாராயணன் சங்கீதா ஆயுர்வேத மருத்துவர் பபிதா, கிருத்திகா யோகா மருத்துவர் பழனிசாமி, மற்றும் ஆறுமுகம் கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், இந்திரஜித், மண்டல தலைவர் புண்ணியமூர்த்தி, சதாசிவம் மற்றும் ஆயுர்வேத துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: