இவரது கட்டுப்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் 14 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த 2 மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து செயலாளர் சுரேஷ்பாபு, தீபாவளி வசூல் செய்து வருவதாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் குழுவினருடன் பாலக்கரையில் உள்ள திருச்சி விற்பனை குழு அலுவலகத்துக்கு நேற்று பகல் 12மணியளவில் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, செயலாளர் சுரேஷ்பாபுவிடம் இருந்து கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
பின்னர் அவர் தங்கியிருந்த கிராப்பட்டியில் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ. 8 லட்சத்து 80 ஆயிரமும் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக சுரேஷ்பாபுவிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.மின்வாரிய அதிகாரி வீடு: திண்டுக்கல் அருகே பொன்னகரம் அண்ணா நகரை சேர்ந்தவர் காளிமுத்து (50). இவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மின்வாரிய அலுவலக பொறியாளராக உள்ளார். இவரது அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தி ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து பொன்னகரம் அண்ணா நகரில் உள்ள காளிமுத்துவின் வீட்டில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். ‘‘கோவில்பட்டி சோதனையை தொடந்து இங்கு சோதனை நடந்தது’’ என்று போலீசார் தெரிவித்தனர்.
The post திருச்சி விற்பனைக்குழு அலுவலகத்தில் ரெய்டு: செயலாளரிடம் ரூ.9 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.
