அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய மனு; ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றிய பாலகுருசாமி வார இதழுக்கு அளித்த பேட்டியில், உயர்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பணம் பெற்றுக் கொண்டு துணை வேந்தர், ஊழியர்களை நியமிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வார இதழின் ஆசிரியர், வெளியீட்டாளருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அன்பழகன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெ.ஜெயச்சந்திரன், மனுதாரரின் பேட்டியை கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அந்த கருத்துக்கள் நியாயமான விமர்சனம் என்று சாட்சியங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் கீழமை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் எனக்கூறி அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிய மனு; ஐகோர்ட் தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: