விடிய விடிய கொட்டிய கனமழை : சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை… மதுரையில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!!

மதுரை : தமிழ்நாட்டில் பல பகுதிகளில் விடிய விடிய கொட்டிய மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது முதல், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மதுரையில் கடந்த ஒரு வாரமாக மழை நீடிக்கும் நிலையில், நேற்று இரவு இடியுடன் கனமழை பெய்தது. இதனால் காக்கா தோப்பு பகுதியில் இருந்த பழமையான 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அப்பகுதியில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீவல்லிபுத்தூரில் மழையால் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அமாவாசையை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதே போல், ஈரோடு மோசிகீரனார் வீதியில் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். வீட்டுக்குள் விஷ பூச்சிகள் நுழைந்ததால் குழந்தைகள் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஈரோடு நாடார் வீட்டில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஈரோடு அன்னை சத்யா நகர், மல்லிநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

The post விடிய விடிய கொட்டிய கனமழை : சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை… மதுரையில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: