பொருளாதார வளர்ச்சிக்காக விவசாயத்தை புறக்கணிக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் எண்ணித் துணிக வேளாண்மை ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாயிகளின் மதிப்புக்கூட்டப்பட்ட விவசாய விலை பொருட்களை பார்வையிட்டார். மேலும் பசுமை புரட்சியை ஏற்படுத்திய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர்களிடம் பொருட்களை பற்றிய தகவல்களையும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் தங்களின் அனுபவங்களை ஆளுநர் மற்றும் பிற பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதில் தங்கள் பணிகளில் சிறந்து விளங்கிய மற்றும் சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில் முனைவோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘மீன்வளத்துறையில் நம் மாநிலத்திற்கு அருகில் உள்ள ஆந்திரா சிறப்பாக இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் மீன்வளத்துறையில் தேவையான வளங்கள் இருந்தாலும் முறையாக செயல்படவில்லை. பொருளாதார வளர்ச்சிக்காக விவசாயத்தை புறக்கணிப்பது அர்த்தமற்றது. விவசாயியின் மகன் விவசாயம் செய்ய விரும்புவதில்லை. நம் வாழ்க்கை முறை நம்மாழ்வார் சொன்னதாக இருக்கவேண்டும்’’ என்றார்.

The post பொருளாதார வளர்ச்சிக்காக விவசாயத்தை புறக்கணிக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: