10 ஆண்டுகள் கழித்து 2015ல் அப்போதைய மார்க்கெட் விலையை செலுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரவை ரத்து செய்து, 2005ம் ஆண்டின் திட்டத்தின் பேரில் உரிய தொகையை செலுத்த அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் கிரையப்பத்திரத்தை செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் புருஷோத்தமன் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்த மனைக்கு உரிய தொகையை பல ஆண்டுகளாக நிர்ணயிக்காதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். 6ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என்றால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
The post வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்த மனைக்கு உரிய தொகையை பல ஆண்டுகளாக நிர்ணயிக்காதது ஏன்? ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.
