அவர் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி, காக்கிநாடா, கோபிகிருஷ்ணா காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) என தெரியவந்தது. மேலும், அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கிவந்து, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து சில்லறை விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பல்லாவரம் அருகே கஞ்சா விற்ற ஆந்திர வாலிபர் கைது; 22 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.
