காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பகவதி வரவேற்றார். இதில், செய்யூர் தொகுதியில் உள்ள திருக்கழுக்குன்றம், சித்தாமூர், லத்தூர் ஒன்றியங்களில் உள்ள 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 32 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பெண்கள் கருவுற்ற உடனே சுகாதார மையத்திலும், குழந்தைகள் மையத்திலும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக வழங்கப்படும் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மாத்திரைகளை சரியாக உட்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை வைத்தனர். ஆனால், தற்போது குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயரின் அர்த்தம் கூட தெரியாமல், வடமாநிலத்தவர் பெயர்களை வைக்கின்றனர்.
இதனை நம் தமிழக மக்கள் உணர்ந்து, தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். பெண்களின் சொத்துரிமைக்காக பாடுபட்டவர் அம்பேத்கர். ஆனால், அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தவர் நமது கலைஞர். இன்று இந்தியா முழுவதும் பெண்களுக்கு சம உரிமை என்ற சட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இன்று பேருந்தில் பெண்களுக்கு இலவச பயண வசதி, அரசு பள்ளியில் படித்து மேற்படிப்புக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம், இந்தியாவிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தது நமது திமுக ஆட்சி மட்டும் தான்.
எனவே, பொதுமக்கள் இதை கருத்தில் கொண்டு நமது அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், கர்ப்பிணிகள் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியத்துடன் பெற்றெடுத்து, குழந்தைகளே நன்றாக படிக்க வைத்து நாட்டின் எதிர்கால தூண்களாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத்தொடர்ந்து 250 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் ஆர்.டி.அரசு, சுபலட்சுமி பாபு, ஏழுமலை, துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி, ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பாபு சரவணன், சிற்றரசு, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தசரதன், அவைத்தலைவர் இனிய அரசு, மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி மகேந்திரன், சாந்தி ரவிக்குமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாஜிதா பேகம் நன்றி கூறினார்.
The post அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை வைக்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.
