ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஓட்டப்பிடாரம், அக். 18: ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி, கவர்னகிரி, அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி, கவர்னகிரி, அகிலாண்டபுரம் ஆகிய பஞ்சாயத்துகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கூடுதல் சாலைகள், குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வடிகால் வசதி, பள்ளி கட்டிடம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினர். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார். தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்தால் அவர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

25க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பேட்டரி மற்றும் விசை தெளிப்பான்கள், புல் வெட்டும் கருவி, தார்ப்பாய்கள் உள்ளிட்ட பொருட்கள், பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் சண்முகையா எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், கிரி, மேலாண்மை துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பகுதிகளின் பஞ்சாயத்து தலைவர்கள், யூனியன் கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: