சந்திரயான் 3 விண்கலம் உட்பட 4,000 பொம்மைகளுடன் மெகா கொலு கண்காட்சி: பொதுமக்கள் கண்டு ரசிப்பு

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் ஜிகேஎம். காலனி 36 வது தெருவில் உள்ள நவராத்திரி கோயிலில் லட்சுமி, சரஸ்வதி, சக்தி உள்ளிட்ட சுவாமி சிலைகள் உள்ளது. இந்த கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று துவங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலுவில் மகாபாரதத்தை குறிப்பிடும் பொம்மைகள், நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொம்மைகள், இயற்கை உணவு முறையை நினைவுபடுத்தும் பொம்மைகள், பண்டையகாலத்தில் நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட 4 ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தாண்டு இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தை குறிக்கும் வகையில் ஒருவர் அமர்ந்து விண்கலத்தை இயக்குவது போலவும் ராக்கெட் மேலே சென்றவுடன் லேண்டர் விண்கலம் நிலவில் தரை இறங்குவது போன்றும் கொலுவில் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. தேவர்கள் பாற்கடலை கடைவதுபோன்று பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 32 ஐம்பொன் விநாயகர் சிலைகளும் இடம் பெற்றுள்ளது. இந்தியா, தாய்லாந்து மற்றும் எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பொம்மைகள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் பண்டைய உணவு முறை, நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை குறித்து மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வரவும் மாணவர்களும் கல்வித்திறன் அறிவியல் மற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய விளையாட்டு முறைகளை தெரிந்துகொள்ளவும் உரிய செயல்முறை விளக்கத்துடன் கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதுபொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று கொலு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கஜேந்திரன் கூறினார்.

 

The post சந்திரயான் 3 விண்கலம் உட்பட 4,000 பொம்மைகளுடன் மெகா கொலு கண்காட்சி: பொதுமக்கள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Related Stories: