என் மீதான புகார் தவறானது: செல்லூர் ராஜூ விளக்கம்

மதுரை: என் மீதான புகார் தவறானது என்று செல்லூர் ராஜூ விளக்கமளித்து உள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டுறவுத்துறையில் எந்த ஒரு பொருளை கொள்முதல் செய்வதாக இருந்தாலும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தான் டெண்டர் கமிட்டியில் இருப்பார்கள். விதிகளின்படி யாரிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள். இதில் அமைச்சரிடம் எதுவும் கேட்க மாட்டார்கள்.

கணினி கொள்முதலில் அண்ணா பல்கலையின் நிபுணர்கள் குழு, எல்காட் அல்லது நிக் நிறுவனங்களின் அதிகாரிகள் குழுதான் முடிவெடுக்க வேண்டும். நான் கணினி நிபுணரும் இல்லை என எல்லோருக்கும் தெரியும். பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கணினி மென்பொருளை, வேறொரு நபருக்கு கொடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளில் உள்ளதைபோல் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், நகர கூட்டுறவு வங்கிகளில் இணையதள வசதிகள் என்னுடைய காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது.

இதில் யாரும் குறை சொல்லவில்லை. இச்சூழலில் என்னை பற்றிய இச்செய்தி தவறானது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜூம் என்னிடம் கேட்டுள்ளார். அவரிடம், இது முற்றிலும் பொய்யான செய்தி எனக்கூறியுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.

The post என் மீதான புகார் தவறானது: செல்லூர் ராஜூ விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: