கிராம சபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை கைதுசெய்ய 5 தனிப்படைகள் அமைப்பு!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காந்தி ஜெயந்தியை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு பிள்ளையார்குளம் பகுதி மக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் நிர்வாகத்தின் நலன் கருதி ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.

அதன் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேப்பங்குளம் விவசாயி அம்மையப்பன் கேள்வி எழுப்பினார். அப்போது ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், அது குறித்து நீ ஏன் பேசுகிறாய் என்று கேட்டபோது, கோபமாக விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் குளம் செயலர் தங்கபாண்டியன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் செல்வகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

The post கிராம சபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை கைதுசெய்ய 5 தனிப்படைகள் அமைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: