ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு தினகரன் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், ஸ்குவாஸ் போட்டியின் மகளிர் அணி பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கும் ஜோஷ்னா சின்னப்பா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிய அளவிலான போட்டிகள் மட்டுமல்லாது உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க இவ்விருவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.என்று பதிவிட்டுள்ளார்.

The post ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: