அக்.27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மே மாதம் 29ம் தேதி 2024 ஜனவரி 1ம் தேதி தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை அறிவித்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் அக்.17ம் தேதிக்கு பதிலாக அக்.27ம் தேதிக்கு மாற்றியமைத்துள்ளது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்.27 தேதி வெளியிடப்பட உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் அக்.27ம் தேதி முதல் டிச.9ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். அலுவலகம் செல்வோர் வசதிக்காக சிறப்பு முகாம்கள் நவ.4ம் மற்றும் 5ம் தேதியும், நவ.18ம் தேதி மற்றும் நவ.19ம் தேதியும் நடைபெறும். www.voters.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘‘வாக்காளர் உதவி’’ கைபேசி செயலி (Voter Helpline Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

The post அக்.27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: