ஆத்தூர் பகுதிக்கு வெளி மாநில தக்காளி வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்யும் சிறுவியாபாரிகள்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து இருப்பதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆத்தூர், தலைவாசல், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்பட்டு வரும் தக்காளியை உள்ளூர் வர சந்தைகளுக்கும், தக்காளி மண்டிகளுக்கும், தினசரி சந்தைக்கும் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்து இருப்பதால் ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. 28 கிலோ கொண்ட ஒரு ட்ரே தக்காளி பழம் ரூ.120 முதல் ரூ.150 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சிறு வியாபாரிகள் கிலோ கணக்கில் வாங்கி மினி ஆட்டோக்களில் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

The post ஆத்தூர் பகுதிக்கு வெளி மாநில தக்காளி வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்யும் சிறுவியாபாரிகள் appeared first on Dinakaran.

Related Stories: