ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் அக்.5ல் பேரணி: ஜனநாயக மாதர் சங்கம் அறிவிப்பு

ராஜபாளையம்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக, டெல்லியில் அக்.5ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் மாநில பொதுச்செயலாளர் ராதிகா அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு ஒரு கண்துடைப்பாக தெரிகிறது. பல்வேறு இடங்களில், 100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு கூலி வழங்கப்படாமல் இருக்கிறது.

எனவே, 100 நாள் வேலை திட்டத்தித்திற்கு உத்திரவாதம் அளிப்பது, முறையாக சம்பளம் வழங்குவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும். ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளது. இதனை ஏற்க முடியாது. ஒன்றிய பாஜ அரசு பழங்குடியினருக்கும், பட்டியலின மக்களுக்கும் எதிரானதாக உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி அழைக்கப்படாது இதற்கான உதாரணம். ஒன்றிய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கானதாக இல்லை. இதனை கண்டித்து அக்.5ம் தேதி டெல்லியில் பேரணி நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் அக்.5ல் பேரணி: ஜனநாயக மாதர் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: