இதுகுறித்து கேட்டபோது, பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனம் கலந்து தயாரித்த விநாயகர் சிலைகளை, கரைத்தால் நீர்நிலைகள் மாசடையும் என்பதால் அனுமதி மறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர்நிலைகளில் மாசு ஏற்படாது. எனவே, விநாயகர் சிலைகள் விற்பனையை தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், ‘‘மனுதாரர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை விற்பனை செய்வதாக விஏஓ புகாரின்பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் சிலை விற்பனைக்கு தடையாக இருக்கக்கூடாது. சிலைகள் சுற்றுச்சூழல் சார்புடையதாக இருந்தால் அதை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்க முடியாது. மனுதாரர் அனுமதிக்கப்பட்ட அளவில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த சிலைகளை வாங்குபவர்கள் வீடுகள், கோயில்கள், திருமண மண்டபங்களில் வைக்கலாம்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. அந்த சிலைகள் விற்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க முடியாது. விற்பனைக்காக மனுதாரர் தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். அதை அதிகாரிகள் ஆய்வு செய்யலாம். எந்த சூழ்நிலையிலும் தாமிரபரணி அல்லது பிற நீர் நிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில் சிலை விற்பனையை தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே மனுதாரரின் சிலை விற்பனையை அதிகாரிகள் தடுக்கக்கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
The post விநாயகர் சிலை விற்பனையை அதிகாரிகள் தடுக்கக்கூடாது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர்நிலையில் கரைக்க அனுமதியில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
