பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் ஜாத்திரை திருவிழா கோலாகலம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜாத்திரை திருவிழா நடைபெற்றது. ஜாத்திரை திருவிழாவையொட்டி நேற்று பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை, பாண்டறவேடு, கேசவராஜ் குப்பம், கொல்லாலகுப்பம், பொம்மராஜ் பேட்டை, சொரக்காய் பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, ஜங்காளப்பள்ளி, சவுட்டூட், சுந்தம்மாள் கண்டிகை, புதூர், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, வங்கனூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜாத்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மின் அலங்காரம் செய்யப்பட்டு கிராமங்கள் ஜொலித்தன.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் கிராம வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. பெண்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பொதட்டூர்பேட்டையில் பொன்னியம்மன் ஜாத்திரை விழாவில் அம்மனுக்கு பெண்கள் கும்பம் கொட்டி வழிபட்டனர். மாலை அம்மன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலையில் கரைத்தனர். பாண்டறவேடு கிராமத்தில் கங்கையம்மன் ஜாத்திரை விழாவில் கிராம தேவதை எல்லையம்மன், தொப்பையம்மன் கிராம வீதிகளில் உலா நடைபெற்றது.

The post பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை பகுதிகளில் ஜாத்திரை திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: