நாமக்கலில் திறப்பு விழாவையொட்டி சலுகை விலையில் பிரியாணி: கடை முன்பு ஏராளமானோர் திரண்டதால் தள்ளுமுள்ளு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சலுகைவிலையில் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் கடை முன்பு கூட்டம் ஏராளமாக திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளிபாளையம் சேலம் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்றில் திறப்புவிழாவை ஒட்டி ரூ.45க்கு சில்லிசிக்கனுடன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது.

இதனால் நேற்று பிற்பகல் முன்பே கடை முன்பு கட்டுக்கடங்காமல் கூட்டம் திரண்டது. ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு பிரியாணி வாங்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பலர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. மிகவும் பரபரப்பான சாலையில் பிரியாணிக்காக மக்கள் திரண்டதால் பள்ளிபாளையம், சேலம் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

The post நாமக்கலில் திறப்பு விழாவையொட்டி சலுகை விலையில் பிரியாணி: கடை முன்பு ஏராளமானோர் திரண்டதால் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.

Related Stories: