இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய விமலா, திருவண்ணாமலை கோயிலில் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள், தனது மகளை கிருஷ்ணன் கடத்தி சென்று விட்டதாக தாரமங்கலம் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், இருவரையும் தாரமங்கலம் போலீசார் தேடி வந்தனர். இதையறிந்த காதலர்கள், பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணின் உறவினர்கள், ‘பட்டம் படித்த பெண்ணான நீ, தந்தை வயதுள்ளவரை திருமணம் செய்யலாமா?’ என்று கேட்டு, அறிவுரைகளை கூறினர்.
மேலும், கிருஷ்ணனை உதறி விட்டு வரும்படியும், நன்கு படித்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்கிறோம், என்றும் கூறி விமலாவின் காலில் விழுந்து கதறினர். ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்காத விமலா, காதல் கணவர் கிருஷ்ணனுடன் தான் செல்வேன் என விடாப்பிடியாக கூறிவிட்டார். இதையடுத்து, இருவரும் மேஜர் என்பதாலும், விமலா கணவருடன் தான் செல்வேன் என உறுதியாக கூறியதாலும், அவரது விருப்பப்படியே, கிருஷ்ணனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் சென்றனர்.
The post 54 வயது தொழிலாளியை மணந்த 26 வயது ஆசிரியை:பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.