சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தைலாபுரத்தில் ராமதாஸ் ஆலோசனை

சென்னை: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனிடையே, பாமக பெயர், கொடி, மாம்பழம் சின்னத்தை, அன்புமணி பயன்படுத்த தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில், ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை வரும் மே 10ம் தேதி வரை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, பாமக நிர்வாகக் குழு அவசர கூட்டத்தை திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று ராமதாஸ் கூட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவை, அவர் எடுக்கவிருப்பதாக, அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில், பாமக பெயர், கொடி, சின்னம் தொடர்பான வழக்கு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளோம். சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

Related Stories: