சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘தூய்மையான சென்னை’ என்பதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று சைக்கிள் பயணம் நேற்று நடந்தது. இதில், கலந்துகொண்டவர்கள் உருவாக்கிய ‘லிட்டர் ப்ரீ சென்னை’ என்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா கலந்து கொண்டார்.
தொடர்ந்து சைக்கிள் பயணத்தில் அதிக நபர்களை பங்குபெற செய்த ‘நாங்கள் சென்னை சைக்கிள் ஓட்டுநர் குழு’ என்ற குழுவின் தலைவர் பெலிக்ஸ் ஜான் உள்ளிட்டோருக்கு பதக்கங்களை வழங்கினார். தொடர்ந்து, சென்னையில் 4 இடங்களில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த சைக்கிள் பயணம் இசி.ஆர்., வி.ஜி.பி., கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், அண்ணாநகர் டவர் பூங்கா, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் தொடங்கி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் நிறைவு பெற்றது.நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தூய்மை சென்னை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் appeared first on Dinakaran.
