அதன்படி, திருத்திய நுழைவு கட்டணம் பின்வருமாறு:
* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தற்போது இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது.
* 5- 12 மற்றும் 13-17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூ 20 மட்டும் வசூலிக்கப்படும்.
* இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான கட்டணம் ஒரே மாதிரியாக மாற்றப்பட்டுள்ளது.
* சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூ.25 ரத்து செய்யப்படுகிறது.சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து. டைம்-ஸ்லாட் நிறுத்துமிடக் கட்டணம் முறை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
* வாகனங்களுக்கான நிறுத்த கட்டணம் மணி கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூ.115 லிருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பேட்டரி வாகன கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வாகன கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.150.
* வீடியோ ஒளிப்பதிவு கட்டணம் ரூ.500 லிருந்து ரூ.750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வேலூர், சேலம், கிண்டி மற்றும் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நுழைவுக்கட்டணம் உயர்வு: ரூ.115ல் இருந்து 150 ஆக அதிகரிப்பு; வாகன பார்க்கிங் கட்டணம் ரத்து appeared first on Dinakaran.