அரசு பள்ளியில் 2 மணிநேரமாக சுட்டெரிக்கும் வெயிலில் மண் அள்ளிய மாணவர்கள்: பெற்றோர் அதிர்ச்சி

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டிட பணியில் சிமென்ட் கலவை அள்ளிச்செல்லும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி 14வது வார்டு அதிபெருமனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்தில் கட்டிட பணி நடந்து வருகிறது. இந்த பணியில் சிமென்ட் கலவையை கலந்து, அதனை தலை சுமையாகவும், கோணிப்பையிலும் அள்ளிச்ெசல்லும் பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தியுள்ளனர்.

சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக சுட்டெரிக்கும் வெயிலில் இப்பணிகளை மாணவ, மாணவிகள் செய்ததாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் உத்தரவின்பேரில் இப்பணிகளை மாணவ, மாணவிகள் மேற்கொண்டார்களாம். தமிழக அரசு பள்ளி கல்வித்துறையை முன்னேற்றும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் சுட்ெடரிக்கும் வெயிலில் மாணவ, மாணவிகளை இதுபோன்ற வேலைகளை செய்ய வைத்ததை அறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

The post அரசு பள்ளியில் 2 மணிநேரமாக சுட்டெரிக்கும் வெயிலில் மண் அள்ளிய மாணவர்கள்: பெற்றோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: